Advertisement

Responsive Advertisement Ads

யார்பா அது முரட்டு ஆளா ஓடுற” ரோகித்தை முட்டி தள்ளிய பாதுகாவலர்.. 2வது ODIல் சுவாரஸ்ய நிகழ்வு!

ராய்பூர்: நியூசிலாந்து அணியுடனான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மாவை பாதுகாவலர் ஒருவர் கீழே தள்ளிவிட பார்த்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.


தொடரை கைப்பற்றுவதற்கான இந்த 2வது போட்டி ராய்பூரில் உள்ள மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் இந்திய அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்துள்ளது.


முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 34.3 ஓவர்களில் வெறும் 108 ரன்களை மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. அந்த அணியின் முன்னணி வீரர்கள் அனைவரும் சொதப்பினர்.


இந்தியா வெற்றி

கடந்த போட்டியில் நியூசிலாந்து அணியை ஒற்றை ஆளாக தூக்கி நிறுத்திய மைக்கேல் பிரேஸ்வெல்லும் இந்த முறை 22 ரன்களுக்கு விக்கெட்டை பறிகொடுத்தார். இதனையடுத்து மிகவும் எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணியில் ஓப்பனிங் வீரர்கள் ரோகித் சர்மா - சுப்மன் கில் ஆகியோரே 72 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து பாதி ஆட்டத்தை முடித்தனர். சிறப்பாக விளையாடிய ரோகித் சர்மா 50 பந்துகளில் 51 ரன்களையும், சுப்மன் கில் 53 பந்துகளில் 40 ரன்களையும் விளாசினர். பின்னர் வந்த கோலி(11), இஷான் கிஷான் (9) அடிக்க 20.1 ஓவர்களில் இந்தியா இலக்கை எட்டியது.


சுவாரஸ்ய சம்பவம்

இந்நிலையில் இந்த போட்டியின் போது சுவாரஸ்ய சம்பவம் அரங்கேறியது. ஆட்டத்தின் 10வது ஓவரின் போது ரோகித் சர்மா 37 ரன்களுடன் விளையாடி வந்தார். அப்போது திடீரென களத்திற்கு உள்ளே நுழைந்த சிறுவன் ஒருவன் ரோகித் சர்மாவை நோக்கி ஓடி வந்து கட்டியணைத்துக்கொண்டார்.


திடீர் பதற்றம்

ரசிகரின் பாசத்தை உணர்ந்துக்கொண்டு ரோகித் நின்றுக்கொண்டிருந்தார். அப்போது அதை பார்த்த பாதுகாவலர் ஒருவர் வேகமாக ஓடி வந்து ரோகித் சர்மாவின் மீது தவறுதலாக மோத, அவர் கீழே விழும் அளவிற்கு சென்றுவிட்டார். பின்னர்


அச்சிறுவனை தூக்கி கொண்டு செல்ல வேண்டாம் என்றும், அவரே செல்வார் எனவும் கூறி பாதுகாப்பாக அனுப்பி வைத்தார்.


குவியும் விமர்சனம்

இது ஒருபுறம் இருக்க இந்த போட்டியிலும் ரோகித் சர்மா 50 ரன்களை அடித்தவுடன், அதனை பெரிய ஸ்கோராக மாற்றாமல் விக்கெட்டை பறிகொடுத்தார். சுமார் 50 இன்னிங்ஸ்களுக்கும் மேலாக ஒரு சதம் கூட அடிக்காமல் இருந்து வரும் அவர் மீது விமர்சனங்கள் குவிய தொடங்கியுள்ளன. ஆனால் அதை பற்றி கவலையே இல்லை என ரோகித் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments